follow the truth

follow the truth

November, 29, 2024
Homeஉள்நாடுகரையை கடக்கும் புயல் - மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

கரையை கடக்கும் புயல் – மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

Published on

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை இன்று (29) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவெடுத்து திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துரைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

அது புயலாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை (30) தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் காலநிலையில் தாக்கம் இன்றைய தினத்தின் பின்னர் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின்...

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...