தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால் நகரமே வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. அதிகபட்சமாக 1972 நவம்பர் மாதம் 12.4 செ.மீ அளவு பனிப் பொழிந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான சேவையுடன், போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.