follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஆசியாவின் ராணியை கைப்பற்ற சீனாவும் அமெரிக்காவும் போட்டி

ஆசியாவின் ராணியை கைப்பற்ற சீனாவும் அமெரிக்காவும் போட்டி

Published on

இலங்கையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை (blue sapphire) கொள்வனவு செய்வதற்காக அமெரிக்காவும், சீனாவும் விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட, ‘ஆசியாவின் ராணி’ (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள இக்கல் 310 கிலோகிராம் எடைகொண்டது.

ஒற்றைப் படிகத்தினாலானமையினால் அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்துக்கும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், இந்த நீலக்கல் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நீலக்கல்லை, இணையவழியில் இடம்பெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னதாக விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ள நிலையில், சீனாவும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தையில் ஒரு வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள்...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்...