உலகில் அதிகளவு மக்களால் நுகரப்படும் அசைவ உணவென்றால் அது முட்டைதான்.
அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு முட்டை சைடிஷ்தான் முட்டை கைமா.
தேவையானப் பொருட்கள்:
– வேகவைத்த முட்டை – 4
– எண்ணெய் – 2 ஸ்பூன்
– ஏலக்காய் – 2
– பிரியாணி இலை – 1
– சீரகம் – 1/2 ஸ்பூன்
– கிராம்பு – 3
– பட்டை – 1
– மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
– நறுக்கிய வெங்காயம் – 1 கப்
– நறுக்கிய தக்காளி – 1
– நறுக்கிய பச்சை மிளகாய் – 2
– இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
– கரம் மசாலா – 1 ஸ்பூன்
– மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
– மல்லி தூள் – அரை ஸ்பூன்
– வேகவைத்த பட்டாணி – அரை கப்
– கொத்தமல்லி – சிறிதளவு
– உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
– முட்டைகளை வேகவைத்து ஆறியதும் உரித்து உங்களுக்கு வேண்டிய அளவில் நறுக்கியோ அல்லது கேரட் போல துருவியோ வைத்துக்கொள்ளவும்.
– ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், சீரகம், பட்டை மற்றும் பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும்.
– அவை பொரியத் தொடங்கும் போது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
– வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
– பின்னர் நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கவும்.
– தக்காளி நன்கு குலைந்ததும் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூளை சேர்க்கவும்.
– மசாலா பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதன்பின் வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
– பின்னர் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.
– கிரேவி கொதிக்கும் போது அதில் கொத்தமல்லி இலைகளை போடவும்.
– கிரேவி திக்கானதும் அதில் துருவிய முட்டையை சேர்த்து அது கிரேவியுடன் நன்கு செட்டாகும் வரை கிளறவும்.
– சிறிதளவு மிளகுத்தூள் தூவி இறக்கினால் சுவையான முட்டை கைமா ரெடி.
இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.