ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா சீனா மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கான அதிக அளவில் வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ, கனடா பொருட்களுக்கு 20 சதவீதம் வரிவிதிப்பு. அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருட்களும் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அமெரிக்காவிற்குள் வருவது நிறுத்தப்படும்வரை இந்த வரிகள் நீடிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.