இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரு அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இளம் வீரர் என்ற சாதனையை 13 வயது இளம் வீரர் ஒருவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.
அது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வசிக்கும் வைபவி சூர்யவன்ஷி என்ற இளம் வீரர்.
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட மிக இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. வைபவ் சூரியவன்ஷி-க்கு அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதற்கு பிறகு பிறந்து, அதில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்