follow the truth

follow the truth

November, 25, 2024
HomeTOP2வாகனமும் தங்க இடமும் வேண்டும்.. - அமைச்சர் சரோஜா போல்ராஜ்

வாகனமும் தங்க இடமும் வேண்டும்.. – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

Published on

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் அமைச்சகம் வழங்கும் வாகனத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் குடும்ப வாகனத்தை வேலைக்கு பயன்படுத்த முடியாது என்றும் கூறுகிறார்.

கணவர் வைத்தியர் என்றும் அவருக்கு வாகனம் இருப்பதாகவும் தனக்கும் வாகனம் இருப்பதாகவும் தேர்தல் காலத்தில் நண்பர்கள் கொடுத்த வாகனத்தை தான் பயன்படுத்தியதாகவும் கூறுகிறார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வாகனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது தான் தினமும் மாத்தறைக்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் சூழ்நிலையில் இருப்பதாகவும், எனவே தனக்கு பொருத்தமான இடம் தேவைப்படும் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மாத்தறை மாவட்டத்தில் பிரசன்னமாக இருக்க வேண்டும் மற்றும் அமைச்சு மற்றும் பாராளுமன்றத்தின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திடீரென மாறிய வாகன விலைகள்

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலை...

“சும்மா விட மாட்டோம்..” மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும்...

IMF ஒப்பந்தத்தை உடைக்க முடியாது.. – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்...