இந்த ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற ‘Mr World 2024’ போட்டியில் இலங்கையின் மேக சூரியராச்சி (Megha Sooriyaarachchi) மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார்.
இலங்கையின் கலாசாரத்தை பெருமையுடனும், அழகுடனும் வெளிப்படுத்தியதற்காக ‘தேசிய ஆடை மக்கள் தெரிவு’ விருதையும் வென்றார்.
போட்டியின் இறுதி கட்டத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே போட்டியாளர் மேக சூரியாராச்சி ஆவார்.
மிஸ்டர் வேர்ல்ட் போட்டியின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றை மேக சூரியாராச்சி படைத்தார்.