வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இரண்டாவது நாளாகவும் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளித் தொகுப்பு ஒன்றில் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.