என்னை சஜித் பிரேமதாச அழைத்தார் சென்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.
இன்று வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றுக்கு வருகை தந்திருந்த போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. நாம் 25 மாவட்டங்களில் 09 மாவட்டங்களில் மட்டும் தான் போட்டியிட்டோம். மக்கள் எங்களை ஆதரித்தனர், இல்லை என்று கூற மாட்டேன். விஜயகுமார அவர்களின் பிறந்தநாள் அன்றுதான் இந்த கட்சியினை ஆரம்பித்தோம். கட்சிக்கு ஒரு மாதம் தான் ஆகிறது. எங்களுக்கு வெறும் 33 நாட்கள் தான் இருந்தது. காலம் குறைவாக இருந்தது, புதிய சின்னம் புதிய கட்சி, புதிய கொள்கையின் கீழ் போட்டியிட்டோம். கம்பஹா மக்களுக்கு நன்றிகள். நாடுபூராகவும் 84 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. கம்பஹா மக்கள் 22 000 பெற்றுத்தந்தார்கள்.
என்னை சஜித் பிரேமதாச அழைத்தார். ஐக்கிய மக்கள் சக்தியில் நான் போட்டியிட்டிருந்தால் வந்திருப்பேன். திசைகாட்டியில் போட்டியிட சிலர் கூறினர். நான் திசைகாட்டிக்கு எப்போதும் ஆதரவு வழங்கினேன். ஆனால் அங்குள்ள சிலர் எனக்கு உத்தியோகப்பூர்வமாக அழைக்கவும் இல்லை நான் செல்லவும் இல்லை. எனக்கு புதிய கட்சியின் கீழ் போட்டியிட விரும்பினேன்..”