follow the truth

follow the truth

November, 22, 2024
HomeTOP2புதையலைத் தேடி நெடுஞ்சாலைக்கு அருகில் தோண்டும் பணி ஆரம்பம்

புதையலைத் தேடி நெடுஞ்சாலைக்கு அருகில் தோண்டும் பணி ஆரம்பம்

Published on

வேயங்கொட வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது.

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இங்கு புதையல் இருப்பதாக கூறி பல ஆண்டுகளாக புதையல் திருடர்களால் அந்த இடத்தை தோண்டியுள்ளனர்.

மேலும், பல சந்தர்ப்பங்களில் புதையலைத் திறக்கப் பயன்படுத்திய உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிக்கு ஒருவரும் அடங்குவதாக வேயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இங்கு புதையல் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில் பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்படி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்ததன் பின்னர், தொல்பொருள் திணைக்களம், சுரங்க மற்றும் புவியியல் பணியகம், வேயங்கொடை பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் அதிகாரிகளின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

7 மணிநேர வாக்குமூலம் – CIDயிலிருந்து வெளியேறினார் பிள்ளையான்

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சுமார்...

ஜனாதிபதி செயலாளர் – ஜப்பான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று...