follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉள்நாடுபிள்ளையான் இன்றும் CID இற்கு

பிள்ளையான் இன்றும் CID இற்கு

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்பும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினமும்(20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழிலும் வாக்குமூலம் வழங்க விரும்புவதாகத் தெரிவித்த நிலையில், இது தொடர்பான மொழி பெயர்ப்பு வேலைகளை தயாரித்து இன்று வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, சேனல் 4 கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பியது.

சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான குறித்த காணொளியில், சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள பிள்ளையான் அணியின் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா என்பவரே பேட்டியளித்திருந்தார்.

பின்னர், சம்பந்தப்பட்ட காணொளியின் உள்ளடக்கம் குறித்து ஆராய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு முறைப்பாடு கிடைத்தையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.

இதன்படி, மேற்படி விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 12ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அன்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத நிலையில், சட்டத்தரணிகள் ஊடாக வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறு திகதியை அவர் கோரியிருந்தார்.

அதன் பிரகாரம், மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நேற்றுமுன்தினம் அவருக்கு அறிவிக்கப்பட்டு, அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, காலி, கேகாலை,...

தரமற்ற மருந்து இறக்குமதி – அமைச்சரவை பொறுப்பாகாது

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்பாகமாட்டாது என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் ஹரின்...

குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

குவைத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு...