follow the truth

follow the truth

May, 8, 2025
HomeTOP2மூன்று வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

மூன்று வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

Published on

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று IPL லீக்’களுக்கான  திகதிகளை அறிவித்துள்ளது.

மூன்று கட்ட ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி மே 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2026 சீசனை மார்ச் 15 முதல் மே 31 வரையிலும், 2027 சீசனை மார்ச் 14 முதல் மே 30 வரையிலும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளின் எண்ணிக்கையை விட எதிர்வரும் இரண்டு கட்டங்களில் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான போட்டிகளின் எண்ணிக்கை 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2027 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 94 போட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வருடம் நடைபெற்ற போட்டியில் 74 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவி கடத்தல் முயற்சி – சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை...

உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர்...