ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள தமது தூதரகத்தை நேற்று முதல் அமெரிக்கா தற்காலிகமாக மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய படைகள் அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூதரகத்தை மூடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு தாக்குதல்கள் நடாத்தப்படுமாயின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தற்காத்துக்கொள்ள ஏதுவாக, அபாய ஒலி எழுப்பப்படும், அவ்வாறு சைரன் சத்தம் கேட்டால் கீவ் நகரிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களை தற்காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.