follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகிழக்கின் மூன்றாவது சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா

கிழக்கின் மூன்றாவது சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா

Published on

சிறகுநுனி கலை, ஊடக மையம் ஏற்பாடு செய்துள்ள 3ஆவது ‘சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா 2021’ எதிர்வரும் டிசம்பர் 17 – 19 வரை ஆரையம்பதி, காத்தான்குடி பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.

2018 டிசம்பர் முதல் கல்லடி சாந்தி திரையரங்கில் நடைபெற்று வரும் இந்நிகழ்வு கொரொனாப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு இடம்பெறவில்லை.

இத் திரைப்பட விழாவின் ஆரம்ப வைபவம் இம்முறை டிசம்பர் 17 (வெள்ளி) பி. ப. 4.00 மணிக்கு ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் ஆத்மா ஜாபிர் எழுதி இயக்கிய ‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’ (தமிழ்) ஆவணப்படமும் மற்றொரு திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளன.

தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு தினங்களில் காலை 10.00, பி. ப. 4.00, மாலை 7.00 என தினமும் மூன்று காட்சிகளாக மொத்தம் 7 பல்வேறு மொழித் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படவுள்ளன.

சனி, ஞாயிறு நிகழ்வுகள் காத்தான்குடி அமானுல்லா வீதி, இல. 06 இல் அமைந்துள்ள சிறகுநுனி கலை, ஊடக மையத்தில் இடம்பெறும்.

தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் உலகத் தரமான முழுநீளத் திரைப்படங்கள்/ ஆவணப்படங்கள், குறும்படங்கள் காண்பிக்கப்படவுள்ளன.

திரையிடல்களின் நிறைவில் பார்வையாளர் கருத்துப்பகிர்வு இடம்பெறும். திரைப்படங்கள் யாவும் ஆங்கிலத்தில் உபதலைப்பிடப்பட்டுள்ளன.

முற்றிலும் இலவசமான இத் திரைப்பட விழா தொடர்பான மேலதிக விபரங்களை Sirahununi, Aathmaa En முகநூல்கள், www.sirahununi.com இணையத்தளம், sirahununi@gmail.com மின்னஞ்சல் ஆகியவற்றினூடாக திரைப்பட ஆர்வலர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

பிரத்தியேக அழைப்புக்கள் இல்லை, இவ் அறிவித்தலையே அழைப்பாக ஏற்று விழாவுக்கு வருகை தருமாறு அனைவரும் வேண்டப்படுகின்றனர்.

சனி, ஞாயிறு தின நிகழ்வுகள் நடைபெறும் சிறகுநுனி திரைக்கூடம் குறித்த எண்ணிக்கையான ஆசனங்களையே கொண்டிருப்பதால் ஏமாற்றத்தைத் தவிர்க்க 077 77 00043 எனும் அலைபேசி/ WhatsApp எண்ணில் முற்பதிவு செய்ய முடியும். தமிழ், முஸ்லிம் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கருத்திற் கொண்டு சிறகுநுனி இச் செயற்பாட்டை ஆண்டு தோறும் முன்னெடுப்பதாக திரைப்பட விழா இயக்குனர் ஆத்மா ஜாபிர் தெரிவித்தார்.

‘மழைக்குள் திரியாமல் திரைக்குள் வாருங்கள்’

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...