follow the truth

follow the truth

April, 29, 2025
Homeஉலகம்"ஹிஜாப் அணிய மறுப்பது மனநோய்.." - ஈரான் அரசு

“ஹிஜாப் அணிய மறுப்பது மனநோய்..” – ஈரான் அரசு

Published on

இஸ்லாமிய நாடான ஈரானில் பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்கவுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள ஈரான் முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமிய நாடாகும். அங்கு இஸ்லாமிய சட்டங்களின்படியே ஆட்சி நடந்து வருகிறது. அங்கு உயர்மட்ட தலைவராக அலி ஹொசைனி கமேனி இருக்கிறார்.

அங்கு பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அந்நாட்டு அரசு கடுமையாகச் செயல்படுத்தி வருகிறது. அதேநேரம் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஹிஜாப் விதியை நீக்க வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

கிளினக்: இதற்கிடையே ஹிஜாப் விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மனநல சிகிச்சை மையத்தைத் திறக்கவுள்ளதாக ஈரான் அரசு சர்ச்சை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக ஹிஜாப் சிகிச்சை கிளினிக் நிறுவப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி கூறியிருப்பதாக தி கார்டியனின் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கிளினிக்குகள் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் சிகிச்சையை வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், “ஹிஜாப் அணிய மறுப்பது நோய் என்றும் இதனால் பெண்களைக் குணப்படுத்த கிளினிக்குகளை அமைக்கும் யோசனையே ஆபத்தானது. அங்கு ஆளும் நபர்களுக்கு ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அதை ஏற்க மறுப்போரை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவே இதைச் செய்கிறார்கள்” என்று சாடியுள்ளார்.

அதேபோல இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள ஈரான் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹொசைன் ரைசி, ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அமைப்பது என்பது ஈரான் சட்டத்திற்கு மட்டுமின்றி இஸ்லாமிய சட்டத்திற்குமே எதிரான ஒன்று என்று விமர்சித்துள்ளார்.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆடைகளை அகற்றி போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்தே ஈரான் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த மாணவி யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அந்த பெண் முதலில் ஹிஜாப் அணிந்து தான் இருந்தார் என்றும் அங்கிருந்த துணை ராணுவப் படையினர் அந்த பெண்ணின் ஆடைகளைக் கிழித்து அத்துமீறியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த பெண் இதுபோல போராட்டம் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரானில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முறையாக ஹிஜாப் அணியாத 22 வயதான பெண் மஹ்சா அமினி என்பவர் அந்நாட்டு போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து அங்கு நாடு முழுக்க மிக பெரியளவில் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...