follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP2முதலாவது நாடாளுமன்ற அமர்வை எளிமையான முறையில் நடத்த நடவடிக்கை

முதலாவது நாடாளுமன்ற அமர்வை எளிமையான முறையில் நடத்த நடவடிக்கை

Published on

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை மறுமதினம் முற்பகல் 10 மணிக்கு முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து, முற்பகல் 11.30க்கு ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

இதன்படி ஜனாதிபதி அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைப்பார்.

இந்தநிலையில், 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசியப்பட்டியல் விவகாரத்தில் SJB குட்டை குழம்பியது

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய...

லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம்

மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான்...

புதிய அரசினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள்

புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில்...