ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (18) சந்தித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டக்கூடிய சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தை தாம் எடுத்துரைத்ததாக ஜனாதிபதி கூறுகிறார்.
சிறுவர் வறுமை மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டைத் தீர்ப்பது, விசேட தேவையுடையோருக்கு ஆதரவளிப்பது மற்றும் கடுமையான சீர்திருத்தங்களின் ஊடாக ஊழலுக்கு எதிராகப் போராடுவது என்பன தமது இலக்குகளாகும் என ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவித்திருந்தார்.