நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையினை தக்க வைத்துக் கொண்டுள்ள புதிய அரசுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான அவர்களது ஊடக அறிக்கை;
2024.11.14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது.
சகல வேறுபாடுகளையும் மறந்து நாட்டின் அபிவிருத்தியை மையமாக கொண்டு பலதரப்பட்ட மக்கள் இணைந்து அருதிப் பொரும்பான்மை வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி, அதிகாரங்கள் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள்; நாட்டு மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் என்ற வகையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்களது மத, சமய, கலாச்சார உரிமைகளைப் பேணி, சுபீட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு நாட்டை கட்டி எழுப்பும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
அதேபோன்று, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மகத்தான சேவைகளை எந்த வேற்றுமைகளுக்கும் அப்பால் நின்று எமது நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு, அவர்களது பணிகளை செய்யக்கூடிய திறனையும், தைரியத்தையும் இறைவன் கொடுத்தருள்வானாக என்று பிரார்த்திப்பதோடு, எமது நாட்டு மக்கள் அனைவரும் புதிய அரசின் ஆக்கப்பணிகள் அனைத்திற்கும் பூரண ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டு கொள்கிறோம்
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை