பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி, தற்போது பொகவந்தலாவை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சம்பவம் காரணமாக பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.