follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுதிருமணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் - வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி

திருமணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் – வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி

Published on

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொராண்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள முறைமைக்கு ஏற்ப வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் இந்தச் சான்றிதழ்களை வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாகப் பராமரிக்கப்பட்டு e- BMD தரவுக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...

உயர்தரப் பரீட்சை 3 நாட்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்...

நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் கைது

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்...