follow the truth

follow the truth

November, 14, 2024
Homeஉள்நாடுஇரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை

இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை

Published on

களுத்துறை மாவட்டம் C.W.W கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் மட்டத்தில் அவசர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவின் பணிப்புரையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பேசப்பட்டு வரும் இந்த வினாத்தாள், குறித்த பாடசாலையினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சு மட்டத்தில் நடத்தப்பட்ட முறையான விசாரணையின் பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியரின் பெயரை பயன்படுத்தி பணம் பெற்ற இருவர் கைது

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி Eazy Case ஊடாக வைத்தியர்களிடம்...

தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை...

நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி...