follow the truth

follow the truth

November, 14, 2024
HomeTOP2நாளை முதல் காலநிலையில் மாற்றம்

நாளை முதல் காலநிலையில் மாற்றம்

Published on

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (12) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக நாளை(13)முதல் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமையை எதிர்பார்க்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவில் ஒரளவு கனமழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியரின் பெயரை பயன்படுத்தி பணம் பெற்ற இருவர் கைது

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி Eazy Case ஊடாக வைத்தியர்களிடம்...

தொழில்நுட்ப மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து பிரதிநிதிகள் இணக்கம்

நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை...

நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி...