உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து சனல் 4 தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளி தொடர்பான வாக்குமூலமொன்றை பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2019 ஈஸ்டர் தின ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கடந்த ஆண்டு சனல் 4 ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.