காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று(11) அசர்பைஜானின் தலைநகர் பாக்குவில்(Baku) நடைபெறுகின்றது.
190-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்முறை கோப்-29 மாநாட்டில் கலந்துகொள்வதுடன் எதிர்வரும் 22 ஆம் வரை மாநாடு நடைபெறவுள்ளது.
எதிர்காலத்தில் சர்வதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து உலக தலைவர்கள் விரிவாக விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.