கனடாவில் முதன்முறையாக H5 பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனடாவின் தென் பிராந்தியமான பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்திலுள்ள இளைஞர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பொதுமக்களுக்குப் பரவும் அபாயம் குறைவாக உள்ளதென கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.