இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் உடனடியாக பயணிகளுக்கு அறிவிக்கும் வகையில் விசேட ஒருங்கிணைப்பு பிரிவை அமைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை விமானங்களின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஆராய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் நேற்று (10) கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கினார்.
விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், விமான நிலைய வளாகத்தில் 24 மணி நேரமும் பயணிகளுக்கு விமான தாமதங்கள் குறித்த தகவல்களை வழங்கவும், தாமத காலத்தில் வசதிகளை ஏற்படுத்தவும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த நிர்வாகத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 50,000 ரூபா போனஸ் தொகையை குறைக்கும் தீர்மானம் குறித்து ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அறிவுறுத்தியுள்ள அமைச்சர், பணத்தை மீளப் பெறுவது ஒழுக்கக்கேடான செயலாகும்.
அதன்படி, இது தொடர்பான பணத்தை ஊழியர்களிடம் இருந்து வசூலிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.