follow the truth

follow the truth

November, 27, 2024
Homeஉள்நாடுலொஹானின் பிணை மனு வரும் 19ம் திகதி விசாரணைக்கு

லொஹானின் பிணை மனு வரும் 19ம் திகதி விசாரணைக்கு

Published on

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.

மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதிவு செய்யப்படாத கார் ஒன்றை கண்டெடுத்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அன்றைய தினம், இந்த மனு தொடர்பான உண்மைகளை தெரிவிக்குமாறு சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் – மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம்...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை குறித்து அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும்...

மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான...