follow the truth

follow the truth

November, 13, 2024
HomeTOP2இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய கட்டார்

இஸ்ரேல் ஹமாஸ் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய கட்டார்

Published on

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரராக செயல்படுவதை நிறுத்துவதாக கட்டார் அறிவித்துள்ளது.

இரண்டு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை கட்டார் மேற்கொண்டு வந்தது. அதை நிறுத்துவதாக இப்போது அறிவித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்கிறார்களே தவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வருவது இல்லை. இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு. அமைதிக்கும் தாமாக முன்வருவது இல்லை. அவர்கள் ஆர்வம் காட்டும் போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதுவரை பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் தயாராக இல்லை.

கட்டாரில் ஹமாஸ் போராளிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமாஸ் படைகள் அத்துமீறி தாக்குகின்றன. போரை நிறுத்த விருப்பம் இல்லை. அப்படி இருக்கும் போது ஹமாஸ் படையினரை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டார் உள்ளே அனுமதிக்க முடியாது.

ஹமாஸின் அரசியல் கட்டிடம் தோஹாவில் உள்ளது. இனியும் அது செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்து உள்ளது. 10 நாட்களுக்கு முன் இஸ்ரேல் – கட்டார் இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தோம். இரண்டு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தையில் முடிவு வரும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இரண்டு தரப்பும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருக்க நாங்கள் பேச்சுவார்த்தையை தொடர்வது சரியாக இருக்காது.

அதனால் பேச்சுவார்த்தையை முடிக்கிறோம் என்று கட்டார் கூறி உள்ளது. கட்டாரில் ஹமாஸ் போராளிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில்.. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்ற அதே நேரத்தில் கட்டார் இந்த முடிவை எடுத்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும்...

12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது ​செய்யப்பட்டுள்ளதாக...

மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்

மொரிஷியஸ் நாட்டில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நவீன் ராம்கூலம் வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70...