follow the truth

follow the truth

November, 13, 2024
HomeTOP1மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கன வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளை அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொதுஹெர முதல் ரம்புக்கனை வரையான மூன்றாவது பிரிவின் நிர்மாணப் பணிகளை பார்வையிடச் சென்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வீதியின் விசேட தேவையை வலியுறுத்திய அமைச்சர் மூன்றாம் கட்டத்தை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். தற்போது அமைச்சரும் தலையிட்டு இயன்றவரை தடைகளை குறைத்து கட்டுமான பணிகளை முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இத்திட்டம் 4.7.2023 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையிலான முழுத் திட்டத்திற்கான மதிப்பீடு 210 பில்லியன் ரூபாவாகும். பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான இந்த 4 வழிப்பாதையின் தூரம் 32.4 கி.மீ.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன், இயக்குநர் ஜெனரல் எஸ்.எம்.பி. சூரியபண்டார, திட்டப் பணிப்பாளர் அனுராதா ஹெட்டியாராச்சி மற்றும் அதிகாரிகள் குழுவும் இந்த கண்காணிப்பு பயணத்தில் இணைந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும்...

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி...

தேர்தல் பணிகளுக்கு வருகை கட்டாயம் : நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவிப்பு

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த நியமனங்களை மாற்றவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது எனவும், தேர்தல்...