எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 90,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம் 11,000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.