இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
இதன்படி, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி ரோஹினி மாரசிங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வண.களுபஹன பியரதன தேரர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.