follow the truth

follow the truth

December, 24, 2024
Homeஉள்நாடுலொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Published on

“மாகம் ருஹுணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக” வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட இக்களஞ்சிய வளாகத்தின் நிர்மாணப் பணிகளை குறிக்கும் வகையில் பிரதமரினால் நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஷென்ஹொங் உள்ளிட்ட குழுவினருடன் துறைமுக வளாகத்தில் காண்காணிப்பு விஜயம்மொன்றை மேற்கொண்டார்.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தில் உள்ள பல் கல சரக்கு பரிமாற்றல் நடவடிக்கை பிரிவிற்கு (Ro Ro operations) விஜயம் செய்த பிரதமர் அங்கு நடைபெறும் வாகன மீளேற்றல் செயற்பாட்டை கண்காணித்தார்.

துறைமுக வளாகத்தில் உள்ள கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்படும் ஷென்ஷென் ஷின்ஜி குழுமத்திற்கு (Shenzhen Xinji Group) சொந்தமான “பிரினிமி” (Plug and Play) “மண்டலத்தினுள் மண்டலம்” (Park in Park) எனும் எண்ணக்கருவில் செயற்படுத்தப்படும் மின்னணு சாதன உற்பத்தி வலயம் மற்றும் சிலோன் டயர் உற்பத்தி தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் டயர் உற்பத்தி தொழிற்சாலை வளாகம் பிரதமரின் விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட்டது.

டயர் உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைக்கான மூலப்பொருட்களும், மனித வளமும் உள்நாட்டிலிருந்தே பெறப்படுகின்றன. 55.8 ஹெக்டேயர் பரப்பளவிலான டயர் உற்பத்தி தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் முதலீடு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஹம்பாந்தோட்டை முறைமுகம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும், எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோன்சன் லியூ அவர்களினால் பிரதமருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வந்த சீன “Peace Ark” மருத்துவமனை கப்பலை பார்வையிட்ட பிரதமர்

சீன அரசாங்கத்தின் Mission Harmony-2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான “Peace...

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 2,371 மில்லியன் ரூபா நன்கொடை

இந்திய அரசால் வழங்கப்படுகின்றன 2371.83 மில்லியன் ரூபா நன்கொடாவ் உதவிகளின் கீழ் கிழக்கு மாகாண அபிவிருத்தி கருத்திட்டங்கள் பலவற்றை...

இந்த வருடத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

2024ஆம் ஆண்டில் இதுவரை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட...