follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1திரிபோசா நிறுவனத்தை மூட அரசு காய் நகர்த்துகிறது

திரிபோசா நிறுவனத்தை மூட அரசு காய் நகர்த்துகிறது

Published on

இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது ஜயகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் அந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திரிபோஷா நிறுவனத்தினால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், எடை குறைந்த குழந்தைகள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இது நாட்டின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு திட்டமாகும்.

தற்போது, 6 இலட்சத்து 64,920 தாய்மார்களுக்கும், 9 இலட்சத்து 25,172 குழந்தைகளுக்கும் திரிபோஷா வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிராகப் பல அமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள்...

நாளை மறுதினம்(29) மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான...

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)...