எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகிறது.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், கடந்த முதலாம் திகதியும் நான்காம் திகதியும் முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களித்தனர்.
குறித்த மூன்று தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நேற்றும் இன்றும் வாக்களிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்தது.
கடந்த 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அமைய, வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்ற அதனைப் பெற்றுக்கொள் முடியுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.