பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க்குக்கு சொந்தமான படகுடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கப்பலுடன் மோதிய டென்மார்க்கிற்குச் சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், கடல் மற்றும் வான் மார்க்கமாக தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதில் ஒரு கப்பல் 90மீட்டர் (295அடி) நீளமும் மற்றொன்று 55மீட்டர் நீளமும் கொண்டது என சுவீடிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.