follow the truth

follow the truth

November, 6, 2024
HomeTOP1அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது

அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது

Published on

அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுவதாகவும், நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் நேற்று(05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. எதிர்வரும் 5 வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை ஒழித்தல் கிராம மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துதல் என்பன அரசாங்கத்தின் பிரதான நோக்கங்கள். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது.

அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுகிறது. நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணி, மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதேச அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்ததோடு, மக்கள் சேவைகளை குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும்..” எனத் தெரிவித்திருந்தார்.

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில, செயலாளர் ஜயவீர பெர்னாண்டோ உட்பட குழு உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நான்கு முன்னாள் சுங்க அதிகாரிகளுக்கு தலா 35 ஆண்டுகள் கடூழிய சிறை

இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்...

சந்திரிகாவின் வீட்டின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை – அமைச்சரவை பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித...

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று...