follow the truth

follow the truth

November, 6, 2024
HomeTOP1பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வெளியானது

பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வெளியானது

Published on

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஆரோக்கியமான விலங்குகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

“களத்தின் இருப்பு மற்றும் தற்போதைய நிலைமைக்கு அமைய, இந்த வாரம் பன்றிக்காய்ச்சல் பரவலில் சில குறைப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். சில காரணங்களை கருத்திற்கொண்டு வர்த்தமானியை தளர்த்தி புதிதாக மற்றுமொரு வர்த்தமானியை வெளியிட்டோம்.

வர்த்தமானி நவம்பர் 4 முதல் மறு அறிவித்தல் வரை செல்லுபடியாகும். முன்னதாக வௌியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்க அமைய, விலங்குகளை கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் கூறியிருந்தோம், ஆனால் புதிய வர்த்தமானியானது கால்நடை மருத்துவரின் விலங்கு சுகாதார அறிக்கையின் அடிப்படையில் ஆரோக்கியமான பண்ணைகளிலிருந்து நோய்த்தொற்று இல்லாத விலங்குகளை கொண்டு செல்வதை சாத்தியமாக்குகிறது.

மேலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாண அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே அந்த விலங்குகளை வெட்ட முடியும். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி சான்றளித்து அதற்கான பதிவை வழங்குவார். அதன்படி, இறைச்சியை சேமித்து வைக்கும் இறைச்சி கூடங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

அதிலிருந்து வெளியேறும் இறைச்சியை பதப்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்யவும், உணவகங்களில் நோய் தொற்று இல்லாத விலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்யவும் இந்த வர்த்தமானியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.”

இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் மொத்த பன்றிகளின் எண்ணிக்கையில் 50 வீதமானவைகள் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான பன்றிகள் உயிரிழந்துள்ளதாக குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்திரிகாவின் வீட்டின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை – அமைச்சரவை பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித...

டாக்டர் ஷாபிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி...

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித...