தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தம்மையும் கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரினால் தமக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 50ல் இருந்து 30 ஆகக் குறைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின்படி தமக்கு 30 பாதுகாவலர்களை மாத்திரம் வழங்கத் முடிவு செய்யப்பட்டுள்ளமைக்கான காரணம் என்னவென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறித்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.