follow the truth

follow the truth

November, 5, 2024
Homeஉள்நாடுமுக்பில் சினானின் முயற்சிக்கு சவூதி அரேபியாவுக்கான தூதுவர் வாழ்த்து

முக்பில் சினானின் முயற்சிக்கு சவூதி அரேபியாவுக்கான தூதுவர் வாழ்த்து

Published on

காத்தான்குடியைச் சேர்ந்த கண் பார்வை திறனற்ற சிறுவன், அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்திருந்தமை குறித்து நாம் உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.

இரண்டு கண்களும் பார்வை திறனற்ற முக்பில் சினான் என்ற 12 வயது சிறுவனே அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்.

இன்று சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்தில் தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி முன்னிலையில் முக்பில் சினானுக்கு வெற்றியையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இவர் புதிய காத்தான்குடி இலக்கம் 01, பதுரியா மத்ரஸாவில் பகுதி நேர ஹிப்ழ் பிரிவில் செவிப்புலன் உதவியுடன் அல்குர்ஆனை மனனம் செய்து வந்த இவர். இப்போது அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் அல்குர்ஆனின் உள்ள 114 சூராக்களையும் மனனம் செய்து முடிக்க அல்லாஹ்வின் உதவியுடன் மத்ரஸா முஅல்லிம்களின் சிறப்பான வழிகாட்டலில் இந்த சிறுவனுக்கு மூன்றரை வருடங்கள் மாத்திரமே போதுமானதாக இருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(05) போராட்டம் ஒன்றை நடத்தியது. துணைவேந்தர், கணக்காய்வாளர், முகாமைத்துவ பீடங்களின் கோரிக்கைக்கு அமைய...

பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்

தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

70% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர்...