follow the truth

follow the truth

November, 5, 2024
HomeTOP1இறக்குமதி சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரி நீடிப்பு

இறக்குமதி சீனிக்கான விசேட வர்த்தக பண்ட வரி நீடிப்பு

Published on

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டது.

அதன் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 1 ஆம் திகதி முடிவடைய இருந்த நிலையில் அரசாங்கம் குறித்த விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாக கூறியுள்ள போதிலும், அந்த வரிகளை அறவிடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்

தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

70% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர்...

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட்...