follow the truth

follow the truth

November, 21, 2024
Homeவிளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு?

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு?

Published on

நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ஓட்டங்கள் என்ற இலக்கை கூட எடுக்க முடியாமல் ‘சரண்’ அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.

சொந்த மண்ணில் இந்திய அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக சீனியர் வீரர்கள் 37 வயதான கேப்டன் ரோகித் சர்மா (6 இன்னிங்சில் 91 ஓட்டங்கள்), விராட் கோலி (6 இன்னிங்சில் 93 ஓட்டங்கள்) ஆகியோரின் பொறுப்பற்ற துடுப்பாட்டமே இந்திய அணியின் சொதப்பலுக்கு காரணம் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22ம் திகதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடர் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இது தொடர்பாக இந்திய முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்;

“.. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக செயல்படாவிட்டால் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை நாம் இப்போதே யோசிக்க தொடங்கி விட வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் ரோஹித் சர்மா சோபிக்காவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். ஏற்கனவே அவர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டார். ரோஹித் சர்மாவுக்கு தற்போது வயதாகி விட்டது. அவர் இளம் வீரர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தில் ரோஹித் சர்மாவை பாராட்டியாக வேண்டும். நியூசிலாந்து தொடரை இழந்ததும் தொடர் முழுவதும் தான் ஒரு தலைவராகவும் வீரராகவும் சரியாக செயல்படவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

நம் மீது தவறு இருந்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இது ஒரு மனிதனுக்கு நல்ல தகுதியாகும். தவறை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதன் மூலம் அது அவருக்கு அதில் இருந்து மீள்வதற்கு உதவிடும் என்று கருதுகிறேன்..”

“.. விராட் கோஹ்லியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடத் தொடங்குவார் என்று நம்புகிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் எப்போதும் நன்றாக ஆடுவார். அங்கு ஓட்டங்கள் குவிப்பது அவரது பலங்களில் ஒன்று. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இப்போதே கருத்து சொல்வது உகந்ததாக இருக்காது. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன சாதனை

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்....

தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் இணையும் டெம்பா பவுமா

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா (Temba Bavuma) மீண்டும் இணைத்துக்...

இலங்கை – நியூசிலாந்து ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச...