நாட்டின் தற்போதைய அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்னர் கவிழந்து விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் புதிய விரிவான கூட்டணியை உருவாக்கி, அதிகாரத்தை கைப்பற்றி வலுவான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்.
அந்த விரிவான புதிய கூட்டணியில் இணைந்து செயற்படுவது சம்பந்தமாக ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டில் ஆட்சியில் இருப்பதை மக்கள் விருப்பவில்லை எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.