ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருவதாகவும், நகைச்சுவையில் நாட்டை நடத்த முடியாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உகண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள எமது நாட்டுக்கு சொந்தமான பணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீளக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தரும் என மக்கள் எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாச அங்கு தெரிவித்தார்.
“.. திருடர்கள் அந்த பணத்தில் வட்டிக்கு பணம் சம்பாதிப்பதால் இந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும், ஆனால் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவையை வழங்குவதாகவும், நாடு நகைச்சுவையில் இயங்க முடியாது.
தேர்தல் மேடைகளில் கடவுச்சீட்டு வரிசை நிறுத்தப்படும் என கூறப்பட்ட போதும் இன்றும் அது கிடைக்கப்பெறவில்லை எனவும் எம்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் தீர்வு பெற்றும் பயனில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி குறைக்கப்படும், விலைச்சூத்திரம் ஒழிக்கப்படும், உகண்டாவுக்கு பணம் கொண்டு வரப்படும் என்று மேடைகளில் கூச்சலிட்டாலும், இறுதியில் ஜே.வி.பியின் தலைவர் தலைமையிலான அரசாங்கம் எண்ணெய் விலை சூத்திரத்திற்கு அடிமையாகி விட்டது. சாதாரண மக்களுக்கான எண்ணெய் விலையை குறைக்கும் திறன் இருந்தும் அவ்வாறு செய்யவில்லை என சஜித் பிரேமதாச இங்கு கூறியதுடன், சுப்பர் கிளாஸ் பயன்படுத்திய எண்ணெய் விலையே குறைக்கப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் விலை மோசடியால் தீர்மானிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். ஊழல் மற்றும் திருட்டு இன்று எண்ணெய் விலை சூத்திரத்தின் அடிமைகளாக மாறிவிட்டது.
எண்ணெய் விலையை குறைப்பது, மின்சார கட்டணத்தை குறைப்பது, உணவுப் பொருட்களின் விலையை குறைப்பது என்பது நிறைவேற்று ஜனாதிபதிக்கு இலகுவான காரியம்..” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.