தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று நாளை முதல் எதிர்வரும் 9ம் திகதி முதல் முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு குறித்த பிரிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்.
0704 565 656 என்ற இலக்கத்தின் ஊடாக தட்டம்மை, ருபெல்லா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.