follow the truth

follow the truth

November, 22, 2024
HomeTOP2போருக்கான நேரம் வந்துருச்சு..ஆர்டர் போட்ட ஈரான் ‘சுப்ரீம் லீடர்’

போருக்கான நேரம் வந்துருச்சு..ஆர்டர் போட்ட ஈரான் ‘சுப்ரீம் லீடர்’

Published on

இஸ்ரேல் ஈரான் இடையே அடுத்தடுத்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரான் உயர்தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளமை மேலதிக பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ஈரான் மீது, ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கு விதமாக கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தியது.

20க்கும் மேற்பட்ட இராணுவ நிலைகளை குறி வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக ஈரான் தலைநகரான டெஹ்ரானில் அடித்தடுத்து வெடிச்சத்தம் கேட்டது.

அதே நேரத்தில் ஈரான் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்ததாக ஈரான் இராணுவம் கூறியுள்ளது.
ஈரானில் என்ன வகையான சேதங்கள் ஏற்பட்டது என்பது குறித்தான எந்த தகவலும் அப்போது வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஈரானில் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் இஸ்ரல் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியுள்ளது.
அதே நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு சேதங்கள் நடைபெற்றதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக சுமார் 3 மணி நேரம் நடந்த தொடர் தாக்குதலில் ஈரான் பயன்படுத்தி வந்த ஏவுகணைகள்,ட் ரோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் மற்றும் ரேடார் சாதனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் 4 ஈரான் வீரர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஈரான் மதத் தலைவரான அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் ஜனாதிபதியாக தற்போது மசூத் பெசேஷ்கியன் உள்ளார். ஆனால் அவரை விடவும் அதிக அதிகாரம் மிக்க மதத் தலைவராக சுப்ரீம் லீடராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். ஈரானில் அவர் வைத்தது தான் சட்டம் என்பது போல பல நடவடிக்கைகள் இருந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேல் தாக்குதலில் பலியான ஈரான் தாக்குதலில் பலியான வீரர்களின் உறவினர்களை சந்தித்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலுக்கு வலியை புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தற்போது ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது நேரடியாக ஈரான்இராணுவம் ட்ரோன்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகள் மூலமும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஈரான், ஹமாஸ், ஏமானின் ஹைத்தி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட போராளி குழுக்களும் இணைந்து இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் எந்தவிதமான தாக்குதலை நடத்தினாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தங்களுக்கு இருக்கிறது என இஸ்ரேல் கூறியுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பான தாட் இஸ்ரேலில் நிறுவப்பட்டு இருக்கும் நிலையில் ஈரான் விமானங்கள் நுழைந்தால் அவை தரையில் வீழ்த்தப்படும் எனக் கூறியிருக்கிறது. இதற்கிடையே ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளான மேத்யூ மில்லர், எங்கள் எச்சரிக்கையை மீறி ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்போம். மத்திய கிழக்கில் பதட்டத்தை அதிகரிக்க வேண்டாம் என ஈரானுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறோம்” என கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு

இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(21) காலை நிலவரப்படி, டெல்லியின் காற்று தரக்...

இஸ்ரேலிய பிரதமர் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant)...

உக்ரைனிலுள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடிய அமெரிக்கா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் இல் உள்ள தமது தூதரகத்தை நேற்று...