follow the truth

follow the truth

November, 27, 2024
Homeஉள்நாடுபாட்டலியின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க உத்தரவு!

பாட்டலியின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க உத்தரவு!

Published on

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு பிணை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது கடவுசீட்டை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று  மனுவொன்றை தாக்கல் செய்த பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சட்டத்தரணிகள், தனது கட்சிக்காரர் பெப்ரவரி மாதம் வெளிநாடு செல்ல உள்ளதாகவும், தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவரது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, குறித்த கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு பதுளை இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இரத்து

இன்று (27) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த...

நீர்த்தேக்கப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் விடுமுறைகள் இரத்து

நிலவும் கடும் மழையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும்...

சீரற்ற காலநிலை : தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (27)...