follow the truth

follow the truth

November, 1, 2024
HomeTOP2அல்லாஹு அக்பர் சொல்லக் கூடாது.. தாலிபான்களின் அடாவடி

அல்லாஹு அக்பர் சொல்லக் கூடாது.. தாலிபான்களின் அடாவடி

Published on

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக உலக அளவில் விவாதம் எழுந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாட்டை தாலிபான்கள் விதித்துள்ளனர். பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்யவும், பிற பெண்களும் முன் குர்ஆன் ஓதவும் கூடாது என கட்டுப்பாடு விதித்து இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி அஷ்ரப் பணியை அகற்றிவிட்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது வரை பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது.

2021 ஆகஸ்ட் 15ஆம் திகதி தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. குறிப்பாக மக்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் இல்லாமல் அடிமை போல் நடத்தப்படுவதாக முறைப்பாடு எழுந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருட்டில் ஈடுபட்டதாக 3 ஆப்கானியர்களின் கைகள் துண்டிக்கப்பட்டது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் பொருளாதாரமும் சீரழிந்துள்ளதால் மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு கோடி மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வெறும் ரொட்டியையும் டீயை மட்டுமே உண்டு வருவதாக ஐநா சபை கவலை தெரிவித்து இருக்கிறது.

மேலும் வேலை வாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியத்திற்கும் கீழ் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்வதில் தாலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் படிப்பதற்கும், ஏன் அழகு நிலையங்கள் நடத்துவதற்கும் கூட தாலிபான்கள் கட்டுப்பாடு விதித்திருக்கின்றனர்.

பல வெளிநாடுகளில் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முற்றிலும் குறைந்து போய் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் வெளியில் நடமாடுவதற்கு கூட தாலிபான்கள் கட்டுப்பாடுகள் விதித்ததோடு ஆண் நண்பர்களுடன் பொதுவெளிகளில் நிற்கக் கூடாது எனக் கூறியிருந்தனர். இந்த நிலையில் தற்போது அடுத்த அதிரடியாக பெண்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர் தாலிபான்கள்.

அதாவது பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பிரார்த்தனை செய்வது, குர்ஆன் வசனங்களை ஓதுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வளர்ந்த பெண் மற்றொரு பெண் முன்னால் பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அல்லா ஹு அக்பர் என்ற தக்பீர் கோஷம் எழுப்பவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகமாக பயன்படுத்தும் சுபஹானல்லாஹ் போன்ற வார்த்தைகளை சொல்லக்கூடாது.

பெண்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்கக் கூடாது, இதனால் பாடல் பாடவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை தாலிபான் நல்லொழுக்கத் துறை அமைச்சர் காலித் ஹனாஃபியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் அதற்குப் பிறகு நீக்கப்பட்டது. ஏற்கனவே பெண்கள் கல்வி பயிலவும் வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது பிரார்த்தனை செய்வதற்கு கூட தாலிபான்கள் கட்டுப்பாடு விதித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

NPP இல் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து சுமந்திரன் பச்சைக்கொடி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

“தொழிற்சங்கங்கள் கலைக்கப்படும்”

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் வேலை நிறுத்தங்களின் விரும்பத்தகாத அனுபவம் முடிவுக்கு வரும் என தேசிய...

மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது – திலித் ஜயவீர

போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின்...