follow the truth

follow the truth

November, 22, 2024
HomeTOP2"இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால் ஏற்போம்.. ஆனால் கெஞ்சமாட்டோம்"

“இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால் ஏற்போம்.. ஆனால் கெஞ்சமாட்டோம்”

Published on

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்று வரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த போரால் காசா மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. ஹமாஸை அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமீபத்தில், ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யஹியா சின்வார் கொல்லப்பட்டார். லெபனானையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலை எதிர்த்து வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்டார். அவரை அடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட இருந்த ஹஷெம் சஃபீதினும் அடுத்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லாவின் வழக்கமான நடைமுறைப்படி ஷூரா கவுன்சில் கூடி நைம் காசிமை பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி என்பவரால் 1991 ஆம் ஆண்டு அந்த அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் நைம் கசிம். அடுத்த சில ஆண்டுகளில் இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் அப்பாஸ் அல்-முசாவி கொல்லப்பட்டார். ஹசன் நஸ்ரல்லா பொதுச் செயலாளர் ஆனபோதும், துணைத் தலைவராக நைம் காசிம் தொடர்ந்தார்.

ஹிஸ்புல்லாவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் அவர் நீண்ட காலமாக இருந்துள்ளார். ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்குப் பிறகு கடந்த 8 ஆம் திகதி அளித்த நேர்காணலில், லெபனானுக்கான போர்நிறுத்த முயற்சிகளை ஹிஸ்புல்லா ஆதரிப்பதாகக் கூறி இருந்தார் நைம் காசிம்.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமான தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட நிலையில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் முடிவுக்கு வரக்கூடும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்த வேளையில், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மீண்டும் போர் தீவிரமடையக்கூடும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக பேசியுள்ளார் நைம் காசிம்;

“எங்கள் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவின் பணித் திட்டத்தின் தொடர்ச்சியே எனது வேலையும். அவர் உருவாக்கிய போர்த் திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளின்படி நடந்தால் மட்டும் தான். போர் நிறுத்தத்திற்காக நாங்கள் கெஞ்ச மாட்டோம்” என நைல் காசிம் கூறியுள்ளார்.

சர்வதேச மத்தியஸ்தர்கள், லெபனான் மற்றும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள சூழலில் ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த எம்.பி.யின் பதவி இழக்கப்படும்?

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நாடாளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர்...

மூன்று வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று...

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித்...