கொழும்பு நகரில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக கொழும்பு மாவட்டத்தில் பதிவான மழைக்காரணமாகவே நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.